• May 13 2024

நிறைமாத கர்ப்பத்துடன் பிரத்யேக உடையில் இருக்கும் நடிகை ஆலியா பட்- கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவின் முக்கிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் மகேஷ் பட் . இவரின் மகள் தான் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த இவர்  2012 ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவூட்டில் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இது தவிர சமீபத்தில் RRR, டார்லிங், பிரம்மாஸ்திரா படங்களிலும் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட் தற்போது ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் ஆலியா நடித்து வருகிறார். மேலும் இவர் நடிகர் ரன்பீரைத் திருமணம் செய்துள்ளார்.


சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படத்துடன் அறிவித்திருந்தார்.சில நாட்களுக்கு முன் நடிகை ஆலியா பட்டுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் வளைகாப்பு நடந்தது. ஆலியா பட் குடும்பம் & ரன்பீர் கபூர் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் ஆலியா பட் நிறைமாத கர்ப்பத்துடன் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக உடை அணிந்து புகைப்படங்களில் தோன்றியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement