• May 10 2024

"ஓரமா போடா விளக்கெண்ணெய்" -ப்ளூ சட்டை மாறனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

"ஆன்டி இந்தியன்" என்ற படத்தின் மூலம் இயக்குநரானவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவோ அல்லது அறிமுக ஹீரோவாகவோ யாராக இருந்தாலும் சரி பாராபட்சம் பார்க்காமல் அனைவரையும் விமர்சிப்பார்.

ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர் படம் எடுக்கும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து அதிரடியாக சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான அஜித்தின் "வலிமை" படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன். அதாவது அஜித்தின் தோற்றத்தையும், அவர் பரோட்டா மா பிசைவது போல ஸ்டெப் போடுவதாகவும் குறை கூறியிருந்தார்.

இவரின் இப்பேச்சுக்கு சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்ததோடு இவருக்கெதிராக கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது.இந்த நிலையில் இன்றும் இவருக்கெதிராக அஜித் ரசிகர் ஒருவர் "நீ யாராக என்ன வேணாலும் பண்ணிட்டு போ. தலயைப் பற்றிப் பேசினால் உடம்பில தலை இருக்காது" என டுவிட்டரின் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கெல்லாம் அஞ்சாத விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் "ஓரமா போடா விளக்கெண்ணெய்" என அந்த அஜித் ரசிகருக்குப் பதிலடி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement