• May 07 2024

நயன்தாராவின் புதிய படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்- அடடே அப்படத்தை யார் இயக்குகின்றார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாள சினிமாவில் வெளியாகி  பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் 'லூசிபர்'. இப்படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்ததோடு மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தை தெலுங்கில் மோகன் ராஜா,ரீமேக் செய்து வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.அதே போல படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சல்மான்கானும் நடிக்கின்றார்.


 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படத்திற்கு தமன் இசையமைப்பதோடு  'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, 'காட்ஃபாதர்' படத்தில் நடிகை நயன்தாரா, சத்யபிரியா ஜெய்தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் ஆக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement