• May 05 2024

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வருகின்றார். இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கின்றார்.

இப்படத்திற்காக தனது தோற்றத்தை இளம் வாலிபனாக மாற்றியுள்ளார் சிம்பு. அதற்காகவே இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டுமே சுமார் ரூ. 15 கோடி வரை அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு விற்றுப்போயுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும், சாட்டிலைட் உரிமத்திற்காக பல தொலைக்காட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement