• May 18 2024

பாபா மந்திரம் போட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ராஜு செய்த விடயம்- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அண்மையில் முடிவடைந்த ஷோ தான் பிக்பாஸ் சீசன்5. விறுவிறுப்பாக ஓடி முடிந்த இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

மேலும் விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்னும் நடன நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் நடனமாடி வருகின்றனர்.

தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பாவனி, அமீர், ஆர்த்தி, நாடியா சாங், சுஜா வருணி என பல போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் பணி புரிந்து வருகின்றார். தொகுப்பாளராக ராஜு மற்றும் ப்ரியங்கா ஆகியோர் கடமையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இதில் ராஜு செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதும் உண்டு. இந்த நிலையில் ராஜூ செய்யும் சேட்டைகள் அடங்கிய ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராஜூ முதலில் பாபா ரஜினி ஸ்டைலில் பேசி பலூனை தன்னிடம் வரவழைக்கிறார். இதை பார்த்ததும் ராஜூ எப்படி பாபா மந்திரம் போட்டு தன்னிடம் பலூனை வரவழைத்தார் என தெரியாமல் அரங்கமே ஆச்சரியப்பட்டு போனது.

ரஜினியின் பாபா கெட்டப்பை போட்டு, அந்த மந்திரத்தை சொன்னாலே, பலூன் மட்டுமல்ல, எதுவேணாலும் வரும் என ரஜினி ஸ்டைலில் ராஜூ பஞ்ச் டயலாக் பேச, ரம்யா கிருஷ்ணனோ, “இங்க என்ன நடக்குதுனே எனக்கு புரியல” என ஆச்சரியமாக கேட்டார். பாபா படத்தின் ஒரு காட்சியில் ரஜினி மந்திரம் சொல்லி, நீலாம்பரி என்னும் பிரபல கேரக்டரில் வரும் ரம்யா கிருஷ்ணனை தன் பக்கம் வரவழைத்து பரிசோதித்து பார்க்கும் சீன் தான் நினைவுக்கு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement