• May 03 2024

அழகிற்கு வயதேது ..? கொள்ளை அழகில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கஜோல்… வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி சினிமா கொண்டாடும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை கஜோல். பாலிவுட்டின் கனவு நாயகி என்றாலே அது நம்ம கஜோல் தான். அதுவும் இவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த படங்களில் பெற்ற வெற்றிகளோ ஏராளம். ஒரு காலத்தில் இந்தி சினிமா கொண்டாடிய முக்கியமான ரீல் ஜோடிகளாக இவர்கள் வலம் வந்திருந்தார்கள்.

இவர் இந்தியில் மட்டுமன்றி தமிழ் சினிமாவிலும் கால் பதித்து தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார். அதாவது தமிழில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 1997-ஆம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த ஒரு படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்.

அப்படத்தினைத் தொடர்ந்து பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2017-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' என்ற படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

இவர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மகன் மற்றும், ஒரு மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தும பாலிவுட்டில் பல படங்களில் கணவன் மனைவி என இருவருமே போட்டி போட்டு நடித்து வந்திருந்தார்கள். எனினும் கஜோலின் கணவர் எதிர்பாராத விதமாக 2020 இல் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கஜோல் படங்களையும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். அவ்வப்போது தனது புகைப்படத்தினையும், தனது குடும்பத்தினரின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

இந்தவகையில் தற்போதும் தனது அழகிய புகைப்படங்களை சமூக வளைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். 47 வயத்தினைக் கடந்த போதும் இவர் இந்தப் புகைப்படத்தில் இன்னமும் இளமை குன்றாமலே இருக்கின்றார். இதனால் இப்புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement