விவகாரத்தான முன்னாள் மனைவிகளை சந்தித்து வரும் பிரபல நடிகர்…அவரின் பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள்..!

இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திர நாயகர்களில் ஒருவராக கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகர் அமீர் கான். திரையுலகில் இவரது பயணம் குழந்தை நட்சத்திரத்திலிருந்தே ஆரம்பமாகி இருக்கின்றது. அதன் பின்னர் இவர் சுமார் பதினொரு ஆண்டுகள் கழித்து 1984 இல் வெளியான ‘ஹோலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.

அமீர் கானின் குடும்ப வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால், இவர் 1986-ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்தார். எனினும் இவர்கள் இருவருக்குமிடையில் இடம்பெற்ற சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக 2002-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

அதன்பின்னர் 2005-ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த வாழ்க்கையும் நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. அவரையும் 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வந்த இவர் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

இவ்வாறாக பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகின்றார் நடிகர் அமீர் கான். அதுமட்டுமன்றி இவரின் நடிப்பில் தற்போது ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படமானது ஆகஸ்ட் 11-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் ‘காஃபி வித் கரண்’ என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூருடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமீர்கானிடம் பல கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. அங்கு ஆமிர் கான் தனது முன்னாள் மனைவி குறித்து எழுந்த கேள்விக்கு பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பதிலளித்துள்ளார்.

அதாவது அவர் கூறுகையில் தனது முன்னாள் மனைவிகள் ரீனா மற்றும் கிரண் இருவரையும் வாரத்தில் ஒரு முறையாவது சந்தித்து விடுவார் எனக் கூறியிருக்கின்றார். அதுமட்டுமின்றி தற்போதும் இருவருடனும் தனக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் “விவாகரத்து ஆகிவிட்டாலும் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் தான்” என்றும் பதிலளித்து இருக்கின்றார். இவர் எந்தவிதமான தயக்கமும் இன்றிக் கூறிய இந்தப் பதில் அங்கிருந்த பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்