• Apr 19 2024

டிடிக்கு இப்படி ஒரு சகோதரர் இருக்காரா..? பார்ப்பதற்கு ஹீரோ போல இருக்காரே…வெளியான புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பெரிய திரைகளில் ஹீரோயின்களாக நடிக்கும் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் உடனே பிரபலமாகின்றார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் பிரபலமாகி விடுவார்கள். அதிலும் குறிப்பாக சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகள் விரைவில் மக்களுக்கு தெரிந்த முகமாக மாறி விடுகின்றார்கள்.

இவ்வாறாக பலரின் கனவை நனவாக்குவதற்கு அடித்தளம் இட்டுக் கொடுக்கும் ஒன்றாக பிரபல தொலைக்காட்சியான விஜய் டீவி விளங்குகின்றது. ஏனைய சேனல்களை விட இதில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளினிகளுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உண்டு.

இவ்வாறாக விஜய் டீவி வளர்த்து விட்ட ஒரு சிகரமாக விளங்குபவர் டிடி என்கிற திவ்ய தர்சினி. இவர் விஜய் டீவியில் பல வருடங்களாகவே முதன்மை தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகின்றார். ஏனைய தொகுப்பாளினிகளை விட இவருக்கே அதிகளவு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. அதாவது எந்தப் படத்தினுடைய புரொமோஷனாக இருந்தாலும் சரி, இசை நிகழ்ச்சி, பெரிய விழா மேடை என எதுவாக இருந்தாலும் சரி அதனைத் தொகுத்து வழங்குகின்ற வாய்ப்பு முதலில் இவருக்குத் தான் வருகின்றது.

இதேபோன்று இவர் அண்மையில் மலேசியாவில் நடந்த யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியை சூப்பராக நடத்தியிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமே. இவர் சின்னத்திரையில் மட்டுமன்றி பெரியதிரையிலும் தற்போது கலக்கி வருகின்றார். ஒரு சில பட வாய்ப்புக்களை பெற்று அதில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இவ்வாறாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் டிடியை போலவே அவரது அக்கா பிரியதர்ஷினியம் சிறந்த ஒரு தொகுப்பாளினி என்பது அனைவருக்கும் தெரியும். அவரும் நாயகியாக, தொகுப்பாளராக, பரத நாட்டிய கலைஞராக பன்முகத் திறமை கொண்டு விளங்கி வருகின்றார்.

டிடியின் அம்மா மற்றும் சகோதரியின் புகைப்படங்கள் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது இவரின் சகோதரரின் புகைப்படம் ஆனது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பார்ப்பதற்கு ஹீரோ போன்று இருக்கும் அவரின் சகோதரரின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement