• May 18 2024

6 நாட்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் விவரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் தனது 5வது படத்திலேயே ஒரு சவாலான பணியை செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அது என்ன தென்னிந்திய சினிமா கொண்டாடும் இரு மிகப்பெரிய நடிகைகளை ஒரே படத்தில் நடிக்க வைத்தது தான்.

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த இந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

மேலும் 3வது நாளே பட வெற்றியை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா 3 பேரும் பிரபல தேவி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இதில் மிகவும் ஹைலைட்டாக சமந்தாவின் கதிஜா வேடம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

படம் முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் ரூ. 35 மேலாக வசூலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement