• May 18 2024

'மாமனிதன்'' படத்திற்கு விருது….வைரலாகும் ட்வீட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் , சினிமாவை கலக்கி வரும் நடிகர் தான் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

ஹீரோவாக தனி படத்தில் இருந்தாலும் சரி, மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாலும் சரி எதையும் பார்க்காமல் தனது கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து நடிப்பவர்.

இவ்வாறுஇருக்கையில் விஜய்சேதுபதி – சீனு ராமசானி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து உருவான படம் மாமனிதன்.

2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது.மேலும் இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா – இளையராஜா இருவரும் தயாரித்து, இசையமைத்துள்ளனர்.

அத்தோடு இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வெளியிட்ட இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், மாமனிதன் படத்திற்கு, 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த படத்திற்கான ‘’கோல்டன் வின்னர் ‘’விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி இதைப் பதிவிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement