• Aug 04 2025

அடித்து துன்புறுத்திய விஷ்ணு..! அஷ்மிதா வழங்கிய audio பதிவு..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூபர் விஷ்ணு கைதான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அவரது மனைவி அஷ்மிதாவை அடித்து துன்புறுத்தியதாக அவர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 10 ஆண்டுகள் இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக அஷ்மிதா சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் செய்து வந்த பிஸ்னஸ் நஷ்டமடைந்தது குறித்து இவர் கேட்டபோது அவதூறாக பேசி அடித்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக ஒரு audio record ஒன்றினையும் போட்டு காட்டியுள்ளார். இதைவிட அவரது தொழிலுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


எட்டு மாதம் கர்ப்பிணியாக இருந்த போதும் கூட நடு ரோட்டில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் அவரது அம்மாவுடன் சேர்ந்து பல விடயங்களை செய்துள்ளதாகவும் அஷ்மிதா கூறியுள்ளார். மேலும் தான் இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக விஷ்ணுவின் அம்மாவையும் சேர்த்து கூறியுள்ளார். இன்றுவரை தனது பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து பணம் சம்மந்தமான பிரச்சனைகளையும் தானே முடித்து இருப்பதாகவும் நேர்காணலில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement