• Nov 24 2024

யுவன் ஆஃபீஸ்ல அசிங்கப்படுத்தப்பட்ட ஏ.டி.கே...திருமணம் ஆகி பிரிந்த மனைவி... நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்யன் தினேஷ் கனகரத்னம் இதுதான் ஏ.டி.கேயின்  முழுப்பெயர்..இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்துள்ளார்.ஆனால் படித்தது எல்லாம் திருச்சி.இவர்  ஆகஸ்ட் 30 ஆம் தேதி 1981ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.சின்னவயசில இருந்து இவருக்கு படிப்பே வரலையாம்.இவருடைய வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோள் இல்லாமலும் இருந்து இருக்கிறார்.ஆனால் இவரைப் பற்றி தற்போது பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

சின்ன வயசுல இருந்தே பாட்டு கேக்குறது அவருக்கு புடிக்காது. மொத்தமே ரெண்டு பாட்டுதான் கேப்பாராம். ஒண்ணு, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா. இன்னொன்னு ஓஜே ஓஜாயேன்ற சிங்கள பாடல். இதைத்தாண்டி வேற எதுவுமே அவருக்கு கேட்க தோணாதாம். இன்னொரு விஷயம் என்னனா, ஏ.டி.கே பத்தாவது ஃபெயில். அதுக்கப்புறம் கம்ப்யூட்டர்லாம் கத்துக்கிட்டு ஐ.டி கம்பெனில வொர்க் பண்ணிட்டு இருந்துருக்காரு. அதே நேரத்துல மியூசிக் மேலயும் கொஞ்சம் இண்ட்ரஸ் அவருக்கு அதிகமாகிட்டே இருந்துருக்கு. 


அவர் நிறைய ஆல்பம் சாங்ஸ்லாம் ஃபஸ்ட் பண்ணியிருக்காரு. அப்போ, மெலடி பாட்டுலாம்கூட கேட்க ஆரம்பிச்சிருக்காரு. ஒருதடவை சுராங்கனி பாட்டை ரீமிக்ஸ் பண்ணி வைச்சிருக்காரு. அதே பாட்டை விஜய் ஆண்டனி ரீமிக்ஸ் பண்ணப்போறாருனு தெரிஞ்சதும், கஷ்டப்பட்டு அவரை கண்டுபிடிச்சு பேசியிருக்காரு. அந்த நேரத்துல விஜய் ஆண்டனிக்கு ஏ.டி.கே வொர்க் புடிச்சுப்போய், TN-07 AL 4777 படத்துல ஆத்திச்சூடி பாட்டுப்பாட வாய்ப்பு கிடைச்சுருக்கு. அத்தோடு இன்னைக்கு இருக்குற பசங்களுக்குலாம் தெரிஞ்ச ஆத்திச்சூடி இதுதான். ரீசன்டாகூட ஒருபையன்கிட்ட ஆத்திச்சூடி பாடுனு சொன்னதும், இந்தப் பாட்டைதான் பாடுவான். அவ்வளவு பேய் ஹிட்டு. இந்த பாட்டுதான் சினிமால ஏ.டி.கே பாடுன முதல் பாட்டு. வேட்டைக்காரன்ல ஒரு சின்ன தாமரை பாட்டுல ராப் பாடியிருப்பாரு. இமான் மியூசிக்ல ஓடிபோலாமா படத்துல டைட்டில் டிராக் பாடியிருப்பாரு. அதுவும் செம மாஸா இருக்கும். அப்புறம்தான் கடல்ல மகுடி பாட்டு. தனி அடையாளமே அவருக்கு கொடுத்துச்சு.


இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.தற்போது இவருக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது.இதனை எண்ணி தற்போதும் இவர் பிக்பாஸ் வீட்டில் கண்ணீர்வடித்து வருகின்றார்.


இந்நிலையில் அவரோட பாடல்கள் பல ராப் பாடகர்களுக்கு புடிக்கும். அதை பாடிதான் டிரெயிங்லாம் எடுக்குறாங்க. விரல் விட்டு எண்ணக்கூடிய பாடல்களைதான் அவர் பாடியிருக்காரு. ஆனால், ஒவ்வொண்ணும் தரமா இருக்கும். முதல்ல அவர் பாடுன தமிழ் பாட்டு என்ன தெரியுமா? ஏ.ஆர்.ரஹ்மான் அவர் வரிகளைப் பார்த்துட்டு, சொன்ன வார்த்தை செமயா இருக்கும். யுவனை பார்க்கணும்ன்றது அவரோட கனவு அந்த விஷயம் நடந்துச்சா இல்லையா?


ரிதம் படத்துல தனியே தன்னந்தனியே பாட்டைக் கேட்டுட்டு ஏ.ஆர்.ரஹ்மான் மேல காதல்ல விழுந்துட்டாரு. அந்த மாதிரி பாட்டு அவருக்கு பாடணும்னு நினைச்சிருக்காரு. அவரோட மெயில் ஐ.டி கிடைச்சதும், அதுக்கு மெயில் போட்ருக்காரு. ரிப்ளை பண்ணதும் செம ஹேப்பியாகி கான்ஃபிடண்டோட அவர மீட் பண்ண முயற்சி பண்ணியிருக்காரு. கிட்டத்தட்ட 2 வருஷம் ட்ரை பண்ணி கடைசில, ரஹ்மானை பார்க்க ஏ.டி.கேக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 

எனினும் அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு கடல் படத்துல மகுடி மியூசிக் அனுப்பி லிரிக்ஸ் எழுத சொல்லிருக்காரு. அவரு இங்கிலீஷ் வார்த்தைகள்லாம் போட்டு பயங்கரமா எழுதி அனுப்பிருக்காரு. ரஹ்மான் அதைப் பார்த்துட்டு, “எனக்கு இதெல்லாம் வேணாம். போராட்டாக்காரங்க எழுதுற மாதிரி பாட்டு வேணும். உங்க யூனிக்னஸ் வேணும்”னு சொல்லியிருக்காரு. அப்புறம்தான் மகுடி பாட்டு எழுதியிருக்காரு. மியூசிக், வரிகள் எல்லாம் செம பவர்ஃபுல்லா, எனர்ஜியா இருக்கும். அந்தப் பாட்டை சீட்டுல உட்கார்ந்துலாம் கேக்க முடியாது. ஆட்டோமெட்டிக்கா ஆடிட்டு இருப்போம். நீங்க கொஞ்சம் டௌனா ஃபீல் ஆகும்போது, இந்தப் பாட்டு கேளுங்க. வேறலெவல் எனர்ஜிக்கு கூட்டிட்டுப் போகும். அத்தோடு ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ரஹ்மான் பீட் ஹார்ட் பீட் மாதிரி காதுல கேக்கும். “திராவிட பூமியில் ஆளத்தான் பிறந்தவன். கொடியைத்தான் நாட்டிட பிறந்தவன் நான்டா” வரிகள்லாம் செம ஹை வைப் வரிகள். இந்தப் பாட்டை ஏ.டி.கே ஸ்டேஜ்ல பெர்ஃபாம் பண்ண வீடியோதான் இப்போ டிரெண்டிங்.


 ஏ.ஆர்.ரஹ்மான் – ஏ.டி.கே கூட்டணி சேர்ந்தாலே மேஜிக்கா மாறிச்சு. மகுடி ஹிட்டுக்கு அப்புறம் லிங்கா படம் வந்துச்சு. அந்தப் படத்துல ஓ நண்பா பாட்டுல எஸ்.பி.பி கூட சேர்ந்து பாடியிருப்பாரு. அவங்க கூட்டணி வந்த அடுத்த ஹிட்டு பாட்டு ஓ காதல் கண்மணி படத்துல வந்த காரா ஆட்டக்காரா. ரஹ்மான் ஃபோன் பண்ணி, எங்கயா இருக்க. உனக்குனு ஒரு டியூன் இருக்குயா, பண்ணிடுனு சொன்னதும். ஏ.டி.கே இறங்கி விளையாட ஆரம்பிச்சிருக்காரு. 

செம எனர்ஜியான அடுத்த பாட்டு ஆடியன்ஸ்க்கு சுட சுட ரெடி. மணிரத்னம் கூட மாஸா விளையாடுன, ஏ.டி.கேக்கு அடுத்தது பௌலிங் போட்டது கௌதம் மேனன். அச்சம் என்பது மடமையடா படத்துல ரெண்டு பாட்டு ஏ.டி.கே பாடுனதுதான். பைக் லவ்வர்ஸ்க்கான ஆந்தமா மாறிப்போனது ஷோக்காலி பாட்டு. அதை எழுதி பாடுனது ஏ.டி.கேதான். பீட்டுலாம் வேறலெவல்ல இருக்கும். ஷோக்காலினா என்னனு தெரியுமா? எம்.ஆர்.ராதா பயன்படுத்துன வார்த்தையாம். மேலும் இவன் பெரிய ஷோக்காலினு அவர்தான் அடிக்கடி சொல்லுவாராம். அதைத்தான் யூஸ் பண்ணியிருக்காரு. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான்தான் அந்த வார்த்தையை சொல்லியிருக்காரு. தள்ளிப்போகாதே பாட்டு எவ்வளவு ஹிட்டுனு சொல்ல வேண்டியதில்லை. அந்த பாட்டுல ராப் போர்ஷன் ஒண்ணு வரும். அதைப் பாடுனது ஏ.டி.கேதான். இதுக்கிடைல ரஜினிமுருகன்லயும் ராப்லாம் பாடியிருக்காரு. அப்புறம் தளபதி விஜய்யோட மெர்சல் படத்துல மாயோன் தீம் வரும். அதுல ஏ.டி.கே தான் பாடியிருப்பாரு. இப்படி ஏ.ஆர்.ரஹ்மான் – ஏ.டி.கே கூட்டணி தரமான விஷயங்களை பண்ணியிருக்காங்க.

மனிதன் படத்துல முன் செல்லடா பாட்டு வரும்ல, அதுல அனிருத்கூட சேர்ந்து ஏ.டி.கே பாடியிருப்பாரு. செம பாட்டு அது. எத்தனை பேருக்கு புடிக்கும்னு தெரியலை. அந்த பாட்டும் செம எனர்ஜியான, பூஸ்ட் பண்ணி நம்மள தள்ளுற பாட்டாதான் இருக்கும். அனிருத் மியூசிக்ல பாடணும்னு ஏ.டி.கேக்கு ரொம்பவே ஆசை. 

அத்தோடு பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்ததும் அந்த விஷயம் அவருக்கு நடக்கும்னு நினைப்போம். ஆரம்பத்துல இருந்தே அவர் வொர்க் பண்ணனும்னு ஆசைப்பட்ட மியூசிக் டைரக்டர் யுவன்தான். யுவன் ஆஃபீஸ்க்கு போய் பல தடவை அசிங்கப்பட்டு திரும்பி வந்துருக்காராம். அப்புறம் கோவம் வந்து திரும்ப போகலையாம். அப்புறம் அவர்கூட ரொம்பவே க்ளோஸ் ஆகி, யுவனோட மியூசிக்ல ராக்ஸ்டார் ராப்பர்னு சித்துபாத் படத்துல பாட்டு பாடியிருக்காரு.

அத்தோடு  விவேக் மெர்வின் மியூசிக்ல இவரு பாடுன பாட்டும் செமயா இருக்கும். வெடிகுண்டு பசங்க படத்துல டைட்டில் டிராக். டீஜேகூட சேர்ந்து பாடியிருப்பாரு. செம கூலான பாட்டு. 7 அப் மெட்ராஸ் கிக்ல இமான் வீரத்தமிழன்னு பாட்டு ஒண்ணு பாடியிருப்பாரு. அந்தப் பாட்டுல ஏ.டி.கே ராப் போர்ஷன் மட்டும் பாடி பிண்ணியிருப்பாரு. ஹாரிஷ் ஜெயராஜ் மியூசிக்ல சிங்கம் 3 படத்துல யூனிவர்சல் காப் தீம் ஏ.டி.கே பாடுனது தான். ஏ.டி.கே குருவினு ஒரு ஆல்பம் பாட்டு பாடியிருப்பாரு. ராப் பிரியர்கள் மத்தியில செமயான வைரல் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாட்டைக் கேட்டுதான் இன்ஸ்பைர் ஆனதா ஏ.டி.கே இண்டர்வியூக்கள்ல் சொல்லியிருப்பாரு. கேட்டாலே செமயா இருக்கும். இப்படி ஏ.டி.கே கொஞ்சம் பாட்டுதான் மொத்தமா தன் கரியர்ல பாடி இருந்தாலும், எல்லாமே ஹிட்டு. வேறலெவல் எனர்ஜியை தரக்கூடியது.













Advertisement

Advertisement