• May 21 2024

37 வயதில் கவர்ச்சி உடையில் ரசிகர்களை சுண்டியிழுத்த நடிகை வரலட்சுமி சரத்குமார்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012ம் ஆண்டில் சிம்பு -விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் என்றி கொடுத்தவர்.இந்தப் படத்தில் மிகவும் குண்டாக காணப்பட்டார் வரலட்சுமி. படத்தில் சிம்புவிற்கு அக்கா போல அவர் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.



இதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் இவரை காண முடிந்தது. விஜய்யின் சர்க்கார் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த பவர்புல்லான கேரக்டர் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது.அதனைத்  தொடர்ந்து போல்டான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இத்தகைய கேரக்டர்கள் இவருக்கு சிறப்பாக அமைகின்றன.



இந்நிலையில் மிகவும் குலுகுலுவென் குண்டாக இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது மிகவும் ஸ்லிம்மாக  நச்சுன்னு காட்சியளிக்கிறார். தற்போது 37 வயதாகும் இவர் தொடர்ந்து ஒல்லியான தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.



தற்போது அழகான டாப் மற்றும் ட்ரவுசரில் சிறப்பான லுக்கில் இவர் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை மாற்றத்திற்கான புகைப்படங்களாக இவர் வெளியிட்டுள்ளார்.அத்தோடு  தன்னால் முடியுமென்றால் அனைவராலும் முடியும் என்றும் ஊக்கமளித்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ் மற்றும் கெமண்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement