• May 13 2024

தனது தாத்தா முன்னே முக்கிய திரைப்படத்தின் வசனத்தை பேசி அசத்திய செந்திலின் பேர்த்தி- கியூட்டான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் பிரபல்யமான காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர் அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் இவரும்-கவுண்டமணியும் சேர்ந்து அசத்திய காமெடி காட்சிகளை எப்போது வேண்டுமானாலும் ரசித்து பார்க்கலாம்.

தமிழில் என்றும் மறக்க முடியாத நடிகராக காமெடியனாக இருக்கும் இவர் சமீபகாலமாக படவாய்ப்பில்லாததால் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார். இவர் மீண்டும் எப்போது கவுண்டமணியுடன் சேர்ந்து நடிப்பார் என்று ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் இப்போது சாத்தியம் இல்லை என்பது தான் உண்மை. இதனால் குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் செந்திலுக்கு மணிகண்டன், ஹேமசந்திரா என இரு மகன்கள் உள்ளார்கள். தற்போது செந்திலின் பேர்த்தி மிருதி அவர் முன்பே அவரது வசனத்தை ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

https://twitter.com/FilmFoodTravel/status/1531136795915669504

அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்தோடு தாத்தாவையே மிஞ்சும் அளவுக்கு பேர்த்தி நடிக்கிறாரே என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement