• Oct 16 2024

'சிறுவயதில் அப்பாவால் கிளப்-க்கு போனேன்'.. மதுப்பழக்கம் குறித்து மனம் திறந்த டிடி..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்சினி. இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.


சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை தாண்டி பவர்பாண்டி, சர்வம் தலைமையும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இவருடைய கியூட் பேச்சுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிடி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என்னுடைய 16 வயதில் கிளப்பில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்டேன் ஆனால் அவர் அங்கு போக கூடாது என்று சொல்லவிட்டார்.

அப்போது என்னுடைய அப்பாவிடம் இது பற்றி சொன்னேன் அவர் என்னை அனுமதித்தார். நான் குடிக்க மாட்டேன் என்று அவருக்கு தெரியும். தற்போது கூட என்னை சுற்றி பல பேர் மது குடித்தாலும் நான் குடிக்கமாட்டேன் என்று டிடி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


Advertisement