• May 18 2024

அவமானப்படுத்தப்பட்டாரா இயக்குநர் நெல்சன் ?..அவரே கொடுத்த விளக்கம் - நடந்தது என்ன?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கிக்கொண்டிருந்த நெல்சன் திலீப்குமார் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை ஆரம்பித்தார். ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனையடுத்து மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற அவர் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக இயக்கி கவனம் ஈர்த்தார். அதனையடுத்து நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்தார்.


பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே ரஜினியை வைத்து இயக்க கமிட்டான நெல்சனை சுற்றி பீஸ்ட் ரிசல்ட்டுக்கு அடுத்ததாக நெகட்டிவ் டாக் ஓடிக்கொண்டிருந்தது. அதனால் ஜெயிலர் படத்திலிருந்து அவரை தூக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் நெல்சன் மீது நம்பிக்கையை இழக்காத ரஜினி அவரையே இயக்குநராக இறுதி செய்தார். படமும் கடந்த பத்தாம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

 இது ஒரு பக்கம் இருக்க நெல்சன் விருது வழங்கும் விழா ஒன்றுக்கு செல்லும்போது அவரை அங்கிருந்த பவுன்சர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அந்த வீடியோவை அதிகம் பேர் பகிர்ந்து, ஒரு படம் ஹோல்வி கொடுத்தால் இப்படியா நடத்துவார்கள் என கண்டனங்களையும் தெரிவித்தனர்.



இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அதெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த விழாவின் பரபரப்பில் அதுகுறித்தெல்லாம் கவனித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களின் வேலையை அவர்கள் செய்தார்கள். நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டு போயிட்டே இருக்கணும். இதையெல்லாம் யோசிக்கக்கூடாது. அதில் அவமானமோ வேறு எதுவுமோ இல்லை" என கூறியிருந்தார்.






Advertisement

Advertisement