• Jan 18 2025

அர்ராசக்க, மகன் ஆத்விக்கின் கால்பந்து விளையாட்டை பார்க்கச் சென்ற அஜித்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனை அடுத்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.


சமீபத்தில் 'விடாமுயற்சி' கலை இயக்குநர் மிலன் மாரடைப்பினால் அஜர்பைஜான் நாட்டில் உயிரிழந்தார். இது திரைத்துறையில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக,படத்தின் கலை இயக்குநராக அவரது மனைவி மரியா மெர்லின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது இவரது மகன் ஆத்விக் கால்பந்து விளையாடுவதில் வல்லவர் ஆவார். எனவே தன்னுடைய மகன் கால்ப்பந்து விளையாடும் மைதானத்தின் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement