• May 29 2023

நாளைய தினம் லியோ பட ஷுட்டிங்கில் இணையவுள்ள அர்ஜுன்- அதுவும் பைக் சேசிங் காட்சி படமாக்கப்படவுள்ளதா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை மேற்கொண்ட படக்குழுவினர், 

தொடர்ந்து 50 நாட்களை கடந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் படத்தின் சூட்டிங்கை எடுத்து முடித்தனர். தொடர்ந்து சென்னையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தின் பாடல் ஒன்று மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்காக இம்மாதம் 20 தேதி வாக்கில் பாடலின் ரிகர்சலும் தொடர்ந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாடலின் சூட்டிங்கும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கில் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் இணைந்த நிலையில், நடிகர் அர்ஜூன் மட்டும் படத்தின் சூட்டிங்களில் இணையமல் இருந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இவர் நடிகர் விஜய்யுடன் சென்னையில் நடைபெறும் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் இருவருக்கும் இடையில் பைட் காட்சி எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து சிறப்பான திட்டமிடலுடன் இந்தப் படத்தின் சூட்டிங்கை எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.நடிகர் விஜய் லியோ படத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். இவருடன் படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட 6 வில்லன்கள் மோதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement