• May 19 2024

அடடே தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் நீயா நானா கோபிநாத்தின் சகோதரனா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சூப்பர் ஹிட்டான ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பல வருடங்களாக அதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் நீயா நானா.

இதில் கோபிநாத் தொகுப்பாளராக இருந்து பல தலைப்புக்களில் உரையாடி வருகின்றார். ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் பட்டிமன்ற பேச்சாளராக பல மேடைகளில் பேசியுள்ளார்.

இப்போது கூட தனது இன்ஸ்டா பக்கத்தில் நல்லதா நாலு நல்லவிஷயம் என்பதில் நிறைய விஷயங்கள் கூறி வருகிறார்.இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இது தவிர மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கின்றார்.


கோபிநாத்தின் மகள் மற்றும் மனைவியை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் அவரது அண்ணன் குறித்து அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்காது. கோபிநாத்தின் அண்ணன் பிரபாகரன் சந்திரன் வேறுயாரும் இல்லை அவரும் ஒரு நடிகர் தான்.

தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும், பாரதிதாசன் காலணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

இதோ கோபிநாத் அவரது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்,

Advertisement

Advertisement