• Jun 18 2026

நடனத்தில் பெண்கள் ஆட்சியா.? ஜீ தமிழின் அதிரடி முயற்சி..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நடன நிகழ்ச்சி “டான்ஸ் ஜோடி டான்ஸ்” மீண்டும் புதிய சீசனுடன் தொடங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் இந்த புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, ஏற்கனவே கடந்த சீசன்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சி 120-க்கும் மேற்பட்ட நடன ஜோடிகளை அறிமுகப்படுத்தி, 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த முறை நிகழ்ச்சி முற்றிலும் புதிய கான்செப்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. “டான்ஸ் ஜோடி டான்ஸ்” இப்போது பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சீசனாக உருவாக்கப்பட்டுள்ளது.

திருமணமான பெண்கள், இளம் திறமையாளர்கள், தாய்மார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமான பெண்கள் என பல்வேறு பின்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் இந்த மேடையில் தங்களின் நடன திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.


ஆரம்ப தேர்வுகளுக்குப் பிறகு, சிறந்த 10 பெண் நடனக் கலைஞர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 10 பேரும் பின்னர் சின்னத்திரை முன்னணி ஆண் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து தங்களின் நடனப் பயணத்தை தொடர்வார்கள் என்பது இந்த சீசனின் சிறப்பு அம்சமாகும்.

இந்த சீசனில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பிரசாந்த், சிம்ரன் மற்றும் சினேகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக பிரபலங்களும் வழிகாட்டிகளாக இருந்து போட்டியாளர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர்.

பெண்களின் கலைத்திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சீசன், தொடக்கத்திலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement