• Mar 19 2024

அதிர்ச்சி... தமிழ் சினிமாவில் மற்றுமோர் உயிரிழப்பு... பிரபல தயாரிப்பாளர் மரணம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இந்த மாதம் முழுவதும் ஒரு சோகமான மாதமாகவே அமைந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்னவெனில் அடுத்தடுத்து ஏற்படும் மரணங்கள் தான். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் மரணமடைந்தார். இதனையடுத்து சில தினங்களில் பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபல இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான டிபி கஜேந்திரன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இவ்வாறு சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து மரணமடைந்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு சோகமான செய்தி வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


அதாவது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி இன்று காலமானார். 76வயதான நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி, சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.


மேலும் இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'காளி, கர்ஜனை' உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு தமிழ் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement