• Mar 19 2024

பாலிவுட் ஹீரோ இம்ரான் கானுடன் காதலில் விழுந்த பிரபல தமிழ் நடிகை.. பொது இடத்தில் கை கோர்த்து சென்ற ஜோடி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அமீர்கானின் மருமகன் என்ற அடையாளத்தோடு 1988-ஆம் ஆண்டு 'கயாமத் சே கயாமத் தக்' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் இம்ரான் கான். பின்னர் இவர் 2008-ஆம் ஆண்டு 'ஜானே து... யா ஜானே' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். 

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து 'லக், கிட்னாப், டெல்லி பெல்லி, பாம்பே டாக்கீஸ், ஒன்ஸ் அப் ஆன் ய டைம் இன் மும்பை டோபரா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் எட்டு ஆண்டுகளாக நடிகை அவந்திகா மாலிக்குடன் உண்மைக் காதலில் இருந்த இம்ரான் கான் 2011 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.


பின்னர் 2014 ஆம் ஆண்டு இந்த  தம்பதியினருக்கு இமாரா என்ற மகள் பிறந்தார். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் புயல் வந்தது போல் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதாவது 2019 ஆம் ஆண்டில் இம்ரான் மற்றும் அவந்திகா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து கொண்டனர்.


இந்நிலையில் நடிகர் இம்ரான் கான் தற்போது பிரபல தமிழ் நடிகையான லேகா வாஷிங்டன் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. அதை உறுதி செய்யும் விதத்தில் லேகா மற்றும் இம்ரான் கான் பொது இடத்தில் காதல் ஜோடிகளை போல் ஒன்றாக கைகோர்த்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி உள்ளது.


இதனைப் பார்த்தவுடன் ரசிகர்கள் பலரும் இருவருக்கும் இடையே காதல் உள்ளது என்றே உறுதி செய்துவிட்டனர். மேலும் நடிகை லேகா தமிழில் வெளிவந்த 'கல்யாணம் சமையல் சாதம், ஜெயம் கொண்டான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement