• May 12 2024

ஆன்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கப்பட்டதா…ஏன் இந்த திடீர் மாற்றம்…? மிஷ்கின் கூறிய அந்தப் பதில்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆன்ட்ரியா. இவர் கனவு நாயகி மட்டுமன்றி கவர்ச்சி நாயகியாகவும் இருக்கின்றார். இவரது நடிப்பிற்கும், அழகிற்கும் என்றே ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. இவர் நடிகையாக மட்டுமன்றி சிறந்த பின்னணிப் பாடகியாகவும் இருக்கின்றார்.

இவரது நடிப்பில் வெளியாகிய படங்களாக 'கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன்' எனப் பல படங்களைக் குறிப்பிடலாம். இவ்வாறாக தொடர்ந்தும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற ஆன்ட்ரியாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'பிசாசு 2'. இப்படத்தினை மிஷ்கின் என்பவர் பிரமாண்டமான முறையில் இயக்கி இருக்கின்றார்.

இத்திரைப்படமானது கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் முதல்பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று இயக்குநர் மிஷ்கின் அண்மையில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாக இருக்கின்றது. அத்தோடு சமீபத்தில் இந்த படத்தின் உடைய டீசர் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 'பிசாசு 2' என்ற இந்தப் படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில் ஆன்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக படக்குழுவினர் ஏற்கனெவே அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அப்படத்திலிருந்து அவ்வாறான காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு நேர்காணலினை அளித்திருந்தார். அதில் “இப்போது நாங்கள் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம். ஏனென்றால் இது ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையில் இடம் பெறுகின்ற கதையை மையமாகக் கொண்டது. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு இணைந்து அந்த படத்தைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார். இவர் கூறிய இந்த விடயமானது தற்போது பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement