வரலட்சுமியும் அவரது செல்ல மகனும் செய்யும் குறும்பு சேட்டை…வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி இன்று சினிமாவையே தனது காலின் கீழ் கட்டிப் போடும் அளவிற்கு தனது நடிப்பினால் உயர்ந்து நிற்பவரே நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் சிலம்பரசனுக்கு ஜோடியாக ‘போடா போடி’ என்ற படத்தில் நடித்து திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமல்லாமல் துணிச்சலாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்று வருகின்றார். இதனால் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் இவருக்குப் பட வாய்ப்புக்கள் வந்து குவியத் தொடங்கின.

நடிகைகளை பொறுத்த வரைக்கும் நாய்க்குட்டி மேல் இவர்களுக்குப் பிரியம் அதிகம். இதற்கு வரலட்சுமி சரத்குமார் ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல. இந்நிலையில் கடந்த வருடம் இவர் தனது நாய்க்குட்டியுடன் இணைந்து எடுத்த போட்டோ ஒன்றினை போட்டிருக்கின்றார்.

அதாவது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது செல்ல நாய்க் குட்டியை தனது மகன் என்று குறிப்பிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமன்றி நாய்க் குட்டியை தனது மகனாகவே பார்த்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த விடயம் ரசிகர்கள் பலரதும் மனதை ஈர்த்திருந்தது.

இந்நிலையில் இவர் தற்போதும் தனது மகனான நாய்க்குட்டியுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அதில் இவர் அந்த நாய்க்குட்டியை பார்த்துப் பயப்பிடுகின்ற தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார்.

ஆனாலும் அந்த நாய்க்குட்டி தனது வாலை ஆட்டி ஆட்டி தனது சந்தோசத்தை வெளிப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி அந்த வீடியோ பதிவிற்கு மேலே “வித் மை ட்ராமா பேபி” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவானத்து தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்