• Jul 05 2026

வெற்றிக்கு பழகிவிட்ட நடிகர்! 4முறை அரசவிருது; ரசிகர்களைக் கவர்ந்த அந்த ஹீரோ யார்தெரியுமா?

shali / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் தனக்கென ஓர் அழகான அடையாளத்தை உருவாக்கியவராக துல்கர் சல்மான் விளங்குகின்றார். பன்மொழித் திறமை கொண்ட நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி எனப் பல மொழி படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் துல்கர், தற்போது 4வது முறையாக தெலுங்கானா அரசின் திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.

இந்த சிறப்பு வெற்றிக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த உருக்கமான பதிவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துல்கர் தனது பதிவில், "தெலுங்கு சினிமாவில் எனக்கு கிடைத்த அற்புதமான கதாபாத்திரங்களை நினைத்து மகிழ்கின்றேன். நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது. விருது கிடைக்கிறது. இந்த உணர்வை விபரிக்க வார்த்தை இல்லை." எனத் தெரிவித்திருந்தார்.


துல்கர் சல்மான் தெலுங்கு திரையுலகில் “மகாநதி” படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருடைய “ஜெமினி கணேசன்” வேடம், பலர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிக நேர்த்தியாகவும், நெகிழ்ச்சியாகவும் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் அவர் நடித்த “சீதா ராமம்” படம், தெலுங்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்தவகையில் தெலுங்கானா அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இது ஒரு மாநில அளவிலான உயரிய அரச விருது என்பதால், இங்கு கிடைக்கும் அங்கீகாரம் ஒரு பெரிய சாதனையாகவே கருதப்படுகின்றது. துல்கர் சல்மான் இந்த விருதை நான்காவது முறையாக பெற்றிருப்பது, அவரது பங்களிப்புகள் தொடர்ச்சியாக மதிக்கப்படுகின்றன என்பதற்கான சான்றாக காணப்படுகின்றது.


Advertisement

Advertisement