• May 15 2025

திரையுலகிற்கு ரீ - என்ட்ரி கொடுக்கும் எமி ஜாக்சன்..! இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களின் மனதில் அழியாத முத்திரை பதித்த நடிகையாக எமி ஜாக்சன் விளங்குகின்றார். ‘மதராசபட்டினம்’ படத்தின் நாச்சியார் கதாப்பாத்திரத்தில் ஆங்கில பெண்ணாக கலக்கிய அந்த முதல்படமே, தமிழ் சினிமாவிற்கு ஒரு இளம் வெளிநாட்டு கன்னியை அறிமுகப்படுத்தியது. அத்தகைய நடிகை குறித்த தகவல்கள் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.


தற்போது, எமி ஜாக்சன் தனது தாய்மையை அனுபவித்து வருகின்றார். இதனால் சிறிது  காலம் படங்கள் எதிலும் நடிக்காது இருந்தார். இப்பொழுது மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளேன் ஆனால் அந்த திரும்புகை எளிதாக நடக்கவில்லை எனத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


2024ல், நடிகை எமி ஜாக்சன் மற்றும் பிரபல ஹாலிவூட் நடிகர் எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை, தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்த இருவரும் ரசிகர்களிடையே பெரும் வாழ்த்துகளை பெற்றனர்.

இந்தக் குழந்தைக்கு அவர்கள் "ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக்" என அழகான ஒரு பேரை வைத்துள்ளனர். அப்பாவின் அழகு, அம்மாவின் மென்மை ஆகிய இரண்டும் கலந்த முகம் கொண்ட அந்த குழந்தையின் புகைப்படங்களை, எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இவர் மீண்டும் நடிக்க வருவதாக தற்பொழுது கூறியுள்ளார். அந்த நீண்ட கால இடைவேளைக்குப் பின் மீண்டும் நடிக்க வருவதென்பது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement