• Jan 19 2025

இளைஞர்களிடம் சாதுர்யமாக பேசி பணமோசடி செய்த அமலா ஷாஜி! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் அதிலும் டிக் டாக், இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் தான் அமலா ஷாஜி. இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள். உள்ளனர். 

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் போட்டு சோசியல் மீடியாவில் செலிபிரிட்டியாக மாறிய அமலா, தற்போது ஒரு சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.


இந்த நிலையில், அமலா ஷாஜி மீது ஐடி ஊழியர் ஒருவர் பணமோசடி புகார் அளித்துள்ளார். 

அதாவது, குறைந்த தொகை பணம் கொடுத்தால் அதை ஒரு மணி நேரத்தில் பல மடங்காக அதிகரித்து தருகிறேன் என அமலா ஷாஜி.ஏமாற்றியதாக கூறியதாக இளைஞர் ஒருவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.

இவ்வாறு, அமலா ஷாஜிகுறித்த இளைஞனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எந்த ஒரு பதிலும் சொல்லாமல், அதில் மேலும் டெக்னிக்கல் கோளாறு என பணம் பறிக்க பார்த்ததாக குறித்த இளைஞன் மேலும் வாக்கு மூலம் அளித்துள்ளார். 


இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இன்ஸ்டாகிராமில் பேமஸான அமலா ஷாஜி மோசடியில் ஈடுபட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அமலா ஷாஜி இது தொடர்பில் சரியான விளக்கம் கொடுப்பாரா? போலீஸ் விசாரணையில் மேலதிகமாக என்னென்ன விஷயங்கள் வெளிவரப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement