தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். அவருடைய நடிப்பு திறமை, எளிமையான வாழ்வியல் மற்றும் வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் கார் மற்றும் பைக் ரேஸிலும் சிறந்த ஈடுபாட்டைக் கொண்டவர். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'குட் பேட் அக்லி' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த வெற்றியின் பின்னர் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், அஜித் தனது கையில் ஒரு பூனையை தூக்கிக் கொண்டு அதன் காதில் மெதுவாக ஏதோ பேசிக் கொண்டிருப்பது போன்ற அழகான காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த தருணம் அவரது எளிமையான மனிதநேயம் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு கொண்ட பாசத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் "தல என்றால் இதுதான்", "இது தான் எங்கள் ஹீரோவின் ரியல் முகம்" என்று சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
Listen News!