பிரபல இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரீசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நகைச்சுவையின் நாயகனாக திகழும் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் ஃபகத் ஃபாசில் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (ஜூலை 14) மாலை 5.04 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. ‘மாரீசன்’ ஒரு புது விதமனா ஆக்ஷன் மற்றும் சுவாரசியம் கலந்த கதையை கொண்டு உருவாகி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிவேலின் நகைச்சுவை மற்றும் ஃபகத் ஃபாசிலின் மெச்சத்தக்க நடிப்பு ஆகியவை ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் பல முக்கியமான நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் ஆகியோர் அனைவரும் தங்களது முழுத் திறமையையும் செலுத்தி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
டிரெய்லர் வெளியான பிறகு, படம் பற்றிய மேலும் தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மாரீசன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் எதிர் பார்க்கின்றார்கள்.
Listen News!