• May 10 2024

வெளியானது அஜித்தின் AK61 பர்ஸ்ட் லுக்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். வலிமை திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பைக் ரேசிங் மற்றும் பைஃட் சீன்ஸ் எல்லாம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

இதனை அடுத்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் இயக்கத்தில் AK61 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பித்தது.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும் படக்குழுவினர் எந்த வித அப்டேட்டும் வெளியாமல் இருந்ததால் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் கேட்டு வந்தனர்.

ரசிகர்களுக்காக தற்போது ஒருவழியாக ஏகே61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

துணிவு என படத்திற்கு பெயரிடப்பட்டு இருக்கிறார்கள். போஸ்டர் இதோ..




Advertisement

Advertisement

Advertisement