• May 13 2024

துப்பாக்கிச் சூடு போட்டியில் மாஸாக கலந்து கொண்ட அஜித்- வேற லெவல் குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவர் ஆரம்பகாலத்தில் காதல் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக ஆக்ஷன் படங்களிலும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய ஆக்ஷன் திரைப்படமான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை எச். வினோத் இயக்குவதோடு போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய ஏகே62 படத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/TFC_mass/status/1552152513318572033

இது தவிர சமீபத்தில் வெளிநாட்டில் பைக் ரைட் சென்றிருந்தார். அங்கிருந்து அஜித் எடுத்துகொண்ட பல புகைப்படங்கள் வெளிவந்தது. அதை தொடர்ந்து தற்போது துப்பாக்கி சூட்டில் களமிறங்கியுள்ளார் அஜித். இந்த நிலையில் தற்போது திருச்சியில் நடைபெறவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள திருச்சி சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement