• May 05 2024

பிளாக் பஸ்டர் இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் அஜித்..,AK 62 படத்தின் வெளியான மாஸ் அப்டேட்!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை மன்னனாக கோலிவுட்டில் அசத்தி வருபவர்  தான் நடிகர் அஜித். கடந்த மாதம் இவர் நடித்த துணிவு திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் மாஸ் கெட்டப்பில் நடித்தது மட்டுமின்றி, வங்கியால் மக்கள் ஏமாற கூடாது என்று ஒரு சோசியல் மெசேஜுடன் படத்தை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். 

அதுமட்டுமின்றி துணிவு திரைப்படம் இதுவரை 250 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து  AK62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னர் ஏகே 62 படத்தை விக்கி இயக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், மகிழ் திருமேனியிடம் படம் சென்று விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரபல இயக்குநருடன் அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement