• Apr 25 2024

வாரிசு படத்தில் விஜய்க்காக டூப் போட்ட பிரபலத்தை பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க ஒப்பந்தமானார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது காஷ்மீரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்த கொண்டுள்ளனர். லியோ படத்தின் அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


மேலும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த படம் தற்போது 300 கோடி வசூலை கடந்து இருப்பதாக அறிவிப்பு சமீபத்தில் வந்தது.


போட்டிக்கு ரிலீஸ் ஆன துணிவு படத்தை விட வாரிசு பட மொத்த வசூல் தான் அதிகம்.துணிவு படத்தில் அஜித் சில காட்சிகளில் டூப் பயன்படுத்தியதாக முன்பே விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது வாரிசு விஜய்க்கும் ஒருவர் சண்டை காட்சிகளில் டூப் ஆக நடித்து இருக்கிறாராம்.அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 



Advertisement

Advertisement

Advertisement