• Apr 28 2024

10000 பீர் ஓகேவா.. ஹரிஷ் கல்யாணிடம் ஓபனாகக் கேட்ட அதுல்யா ரவி- ரொமான்ஸ் செய்யவே நேரம் சரி போல இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே பிரபல்யமானர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், ஸ்டார் எனும் படத்தில் இருந்து அவர் விலகினார். அதன் பிறகு நடிக்கவே மாட்டாரா என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், டீசல் எனும் புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாகத்தான் நடிகை அதுல்யா ரவி பீர் பாட்டில் போட்டோவை டுவிட் செய்து, ஹரிஷ் கல்யாணை டேக் செய்து 10000 பீர் வேணுமா என கேட்டுள்ளார்.


காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று ரோஸ் டே கொண்டாடப்பட்ட நிலையில், டீசல் படக்குழு இளைஞர்களை கவரும் விதமாக ப்ரோமோஷன்களை ஆரம்பித்து இருக்கிறது. கையில் ரோஜாப்பூவுடன் லுங்கி கட்டிக் கொண்டு ஹரிஷ் கல்யாண் போஸ் கொடுத்துள்ள போஸ்டரையும் வெளியிட்டு டீசர் படத்தை புதுவிதமாக எளிமையான முறையில் ப்ரோமோட் செய்து வருகின்றனர்.


இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி வரும் டீசல் படத்தின் ஹாட் அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கேங்ஸ்டாராக வேறு நடித்திருக்கிறாராம். ஆனால், போஸ்டர்களை பார்த்தால் அதுல்யாவுடன் ரொமான்ஸ் செய்யவே இவருக்கு நேரம் சரியாக இருக்கும் என்றே தெரிகிறது.


நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக தோனி தயாரிப்பில் உருவாகி வரும் Lets Getting Married படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லவ் டுடே ஹீரோயின் இவானா நடித்து வருகிறார். நடிகை நதியா முக்கிய ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் கல்யாண் அடுத்து அடுத்து இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement