• May 06 2024

விஜய்யை திடீரென சந்தித்த அஜித் பட இயக்குநர் -அட இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்ச்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.

இவரின் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் கூற வேண்டும்

அதன்படி தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட்.

மேலும் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

தளபதி 66 திரைப்படம் முடியும் முன்பே அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வர தொடங்கிவிட்ட, அதன்படி ஏற்கனவே தளபதி 67 லோகேஷ் இயக்குவது குறித்த தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றது.

எனினும் இதற்கிடையே தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா தளபதி விஜய்யை சந்தித்தாகவும், அவரிடம் விஜய் கதையை எழுத சொன்னதாகவும் தகவல் வந்துள்ளது. இது உண்மையா என தெரியும் முன்பே விஜய் ரசிகர்கள் பீதியில் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement