• May 19 2024

ஜுவா மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணையும் புதிய படம் பற்றி வெளியாகிய புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ரசிக்கப்படும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் ஜுவா. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் பா.விஜய் இயக்கத்தில் ஓர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. இப்படத்தில் இவருடன் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி, சாரா, தினா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது .

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தப் படம் துவக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement