• May 19 2024

பாத்திரம் கழுவிய ரமணியம்மாள் 63வயதில் பாடகி ஆனது எப்படி..? சாதனைக்கு வயது ஒரு தடையல்ல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் சேனலில் 2017ஆம் ஆண்டு ஒளிபரப்பான `சரிகமப' மியூசிக் ரியாலிட்டி ஷோவின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் ரமணியம்மாள். ரமணியம்மாளுக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக வீட்டு வேலை செய்து வந்தார். 


அவ்வாறு சென்னையில் வீட்டு வேலை செய்து வந்த இவர், வீடுகளில் பாத்திரங்கள் தேய்க்கும்போது, பாடிக்கொண்டே வேலை செய்வது வழக்கம். அப்படி இவர் பாடியதைக் கேட்ட ஒரு வீட்டு உரிமையாளர், 'சரிகமப' ஷோவில் இவர் பங்கு கொள்ள ரமணியம்மாளுக்கு வழிகாட்டினார். 

அந்நிகழ்ச்சியில் வெள்ளந்தியான தனது பேச்சால் எல்லோரையும் கவர்ந்த இவரை, 'ராக் ஸ்டார்' எனப் பட்டம் கொடுத்துக் கொண்டாடினார்கள். மேலும் நடிகரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பாடல்களைப் பாடி சரிகமபா நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களைக் கவர்ந்த ரமணியம்மாள், அதனைத் தொடர்ந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். 


அந்த நிகழ்ச்சி கொடுத்த பெயர் மற்றும் புகழால் ரமணியம்மாளுக்கு சினிமாவில் மீண்டும் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது. அதாவது 2004ஆம் ஆண்டு வெளியான 'காதல்' படத்தில் பாடகியாக ரமணியம்மாள் அறிமுகமாகி பின்னர் ஒரு சில படங்களில் பாடியுள்ளார். 

அந்தவகையில் நாட்டுப்புற பாடகியான இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்த காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி என்ற பாடலைப் பாடிய நிலையில், அந்த பாடல் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மேலும் சூர்யா நடித்த காப்பான் படத்தில் இவர் பாடிய பாடல் வெற்றி பெற்றது.  


இதனைத் தொடர்ந்து ஜூங்கா, சண்டைக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களிலும் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாது இறுதியாக யோகி பாபு நடித்த பொம்மை நாயகி படத்திலும் ராக் ஸ்டார் ரமணியம்மாளின் பாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக தனது 63 வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற ரமணியம்மாள், சாதனைகளுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதனை நிரூபித்து இருக்கின்றார். அத்தோடு சிறுவயதில் இசை கற்கத் தொடங்கி பின் குடும்ப சூழல் காரணமாக வீட்டு வேலைகள் செய்து வந்த ராக்ஸ்டார் ரமணியம்மாள், திருமண நிகழ்ச்சிகளிலும் பாடி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில மாதங்களாக உடல்நலக் குறைவுவால் இருந்த ரமணியம்மாள் இன்றைய தினம் உயிரிழந்துள்ளமை பலரையும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement

Advertisement