• May 12 2024

ஷாருகானைத் தொடர்ந்து ரன்பீர் கபூருடன் நெருக்கமாக இருக்கும் டிடி- இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. கலகலப்பாகவும் சுவாரஸியமாகவும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருவதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி பிரபலங்களுடனும் நல்ல நட்புறவை கொண்டுள்ளார் டிடி. விசில், பா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது கௌதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமைபோல் காக்க ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கானை கட்டிபிடித்தபடி இருந்த போட்டோவை ஷேர் செய்திருந்தார். தற்பொழுது ரன்பீர் கபூருடன் நெருக்கமாக செல்பி எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

அதாவது ரன்வீர் கபூர் ஷாம்ஷரா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ஜூலை 22ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ளார். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தை, கரண் மல்ஹோத்ரா இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி ரன்பீர் கபூருடன் நெருக்கமாக செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement