• Nov 07 2025

மெய்யழகனுக்குப் பிறகு...பிரேம் குமார் மூன்று புது படங்கள்...! வெளியான தகவல் இதோ...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

"96" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குனர் பிரேம் குமார், தனது அடுத்த பட திட்டங்களை அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.


அவர் சமீபத்தில் கூறியதாவது, தனது அடுத்த மூன்று படங்களும் முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு பாணிகளில் உருவாகும். ஒவ்வொரு படமும் தனி கதாபாத்திரங்கள், கதைக்களம் மற்றும் சினிமா சொல்லும் பாணியுடன் காட்சியளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் படம் – Adventure Survival Drama. இதில் 9 முக்கிய கதாபாத்திரங்கள் கதையைத் தூக்கிச் செல்லும். ஒரு single setup-ல், survival மற்றும் suspense சார்ந்த கதை என கூறப்படுகிறது. இரண்டாவது படம் – Action Thriller. இதில் பிரபல நடிகர் Fahadh Faasil முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிகக் குறைந்த கதாபாத்திரங்களுடன், அதிரடியும், மன அழுத்தமும் மிகுந்த ஒரு திரில்லர் அனுபவத்தை வழங்கும் படம் என இயக்குனர் கூறியுள்ளார்.


மூன்றாவது படம் – வித்தியாசமான Love Story. ஆனால் இதில் ஹீரோயின் இல்லையே என்பது பெரிய ட்விஸ்ட். பாரம்பரிய காதல் கதைகளைத் தாண்டி, காதலை புதிய கோணத்தில் சித்தரிக்கும் இந்த முயற்சி, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமையும். தனது கதையாக்கத் திறனால் பேசப்படும் பிரேம் குமார், மீண்டும் மூன்று தனித்துவமான படங்களுடன் ரசிகர்களை மயக்க தயாராகிறார்!

Advertisement

Advertisement