மலையாள சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் நடிகை மஞ்சு வாரியர், இன்று (செப்டம்பர் 10) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது திறமையான நடிப்பால் இந்திய திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள மஞ்சு, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களின் உயர்ந்து நிற்கும் பிரபலமான நடிகை ஆவார்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை சிறப்பிக்கும்படி, தற்போது உருவாகி வரும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட ‘Mr.X’ திரைப்படக்குழுவினர், மஞ்சுவுக்கு சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதை ஒட்டி, அவர்கள் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிறப்பு போஸ்டரில், மஞ்சு வாரியர் படத்தின் மிஸ்டீரியஸ் கதாபாத்திரத்தில் வித்தியாசமான லுக்கில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "Mr.X" திரைப்படம் ஒரு ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து உருவாகும் படமாகும் என்றும், இதில் மஞ்சுவின் வேடம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு பல திரை பிரபலங்களும், ரசிகர்களும் மஞ்சு வாரியருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!