தமிழ்நாடு அரசியலிலும், தமிழ் திரையுலகிலும் சமீபத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை வெளியிட்டதாக தகவல்கள் பரவின. இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவியதும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பதிலாக, நடிகை திரிஷா வழக்கறிஞர் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாக,
1.இந்த அறிக்கை ஊடகங்களில் பரவி வரும் அவரது கட்சிக்காரரைப் பற்றிய விரும்பத்தகாத கருத்துகளுக்கு பதிலாக வெளியிடப்பட்டுள்ளது.
2.உயர் பதவியில் இருப்பவர், இத்தகைய விரும்பத்தகாத மற்றும் பொருத்தமற்ற கருத்துகளை வெளிப்படுத்துவதனை எனது கட்சிக்காரர் ஒரு போதும் விரும்பவில்லை.
3.அவர் எந்த கட்சிகளுடன் தொடர்புடையவர் இல்ல. அரசியலில் அவர் எப்பொழுதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்.
என்றவாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, பரபரப்பாக வைரலாகியுள்ளது.
Listen News!