தமிழ் சினிமா ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் படங்களில் ஒன்றாக சூர்யாவின் 45வது படம், “கருப்பு” (Karuppu) விளங்குகின்றது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்து வருகிறார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதையின் தரம், நடிப்பின் தீவிர தன்மை மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றம் ஆகியவை இப்படத்தின் காட்சிகளை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளன.
இந்நிலையில், “கருப்பு” படத்தின் புதிய தகவல்களை ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் ரசிகர்களுக்காகப் பகிர்ந்துள்ளார். அவர் அதன்போது, “கருப்பு படத்தின் அப்டேட் குறித்து கடந்த ஒரு வருடமாக கேட்டு வருகிறார்கள். ஓடிடி உள்ளிட்ட விஷயங்களால் அடங்கி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இப்படம் வெளியாகும். அனைவரும் காணும் படமாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் கூறிய இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அந்த நாளை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Listen News!