• Apr 15 2026

மீண்டும் ரசிகர்களை காமெடி வெள்ளத்தில் நனைக்கவரும் "சூது கவ்வும்"- ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களில் புதிய பாதையை உருவாக்கிய படமாக கருதப்படுவது “சூது கவ்வும்”. 2013ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த சூது கவ்வும் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், தனித்துவமான கதை அமைப்பு, காமெடி, வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையால் ஹிட் அடித்திருந்தது.

இந்நிலையில், “சூது கவ்வும்” படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடாக வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பல வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், “சூது கவ்வும்” மறுவெளியீடும் அதே வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, இந்த மறுவெளியீட்டிற்கான டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இளம் ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று திரையரங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement