• May 04 2024

மலையாள நடிகர் மோகன்லாலுடன் முதன் முறையாக ஜோடி சேரும் நடிகை த்ரிஷா-படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

அத்தோடு தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இது தவிர சோலோ ஹிரோயினாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டெம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 'தி ரோடு' என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜோடியாக நடிக்க உள்ளார். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தை தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் தாமதமானது. மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement