• May 06 2024

5 வருடங்களுக்குப் பிறகு முக்கிய திரைப்படத்தில் ரி என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ஸ்ரீ திவ்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ரீதிவ்யா. அறிமுகமாகிய திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி என வரிசையாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுவா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.ஆனால் அப்படத்திற்கு பின் ஸ்ரீ திவ்யா எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.

இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. மலையாளத்தில் வரவேற்பை பெற்றுள்ள ஜன கன மன திரைப்படத்தில் தான் ஸ்ரீ திவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சில வருட இடைவேளைக்கு பின் அவரை கண்ட ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் பரப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement