• May 07 2024

தனது கணவருக்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாகக் கொடுத்த மணிமேகலை-குவியும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷேவான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமாக வலம் வருபவர் தான் மணிமேகலை. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

அத்தோடு இவர் ஹுசைன் என்னும் நடன கலைஞரைக் காதலித்து திருமணம் செய்திருக்கின்றார். இருவரும் சேர்ந்தும் கூட பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மணிமேகலை - ஹுசைன் வைத்திருந்த பைக் ஒன்று தொலைந்து விட்டதாக செய்தி பரவின. இது குறித்து மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களின் பைக் தொலைந்து போனது குறித்து பதிவிட்டு இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட மணிமேகலையின் பைக் தொலைந்தது குறித்து கிண்டலடித்து வந்தனர்.

இந்நிலையில் மணிமேகலை - ஹுசைன் தம்பதி விலையுர்ந்த புதிய பைக்கை வாங்கியுள்ளனர். மேலும் மணிமேகலை ஹுசைனின் பிறந்தநாள் பரிசு இந்த பைக் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement