• May 19 2024

நடிகர் ரஜினியை அஜித் சந்தித்தாரா?- விளக்கம் கொடுத்த அஜித்தின் செய்தித் தொகுப்பாளர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது. இதனைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பிடிப்பானது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ,இதன் இரண்டாம் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தினந்தோறும் பல பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது அஜித்-ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை என்றும் இந்த தகவல் பொய்யானது என்றும் இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது என்றும் தெரிவித்தார் இதனை அடுத்து அஜித் - ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது

Advertisement

Advertisement