• Jan 19 2025

'ரொம்பவே போர் அடிக்கிறது..' பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை ரேஷ்மா! அவரே லைவில் சொன்ன அதிர்ச்சி தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்னும் சீரியலில் ராதிகா என்னும் லீட் ரோலில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியலில் இவருடைய கதாப்பாத்திரத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இது தவிர விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசிய நடிகை ரேஷ்மா தான் விரைவில் சீரியல் ஒன்றில் இருந்து விலக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் சூட்டிங் முடிவடைந்ததும் லைவில் ரசிகர்களிடம் பேசி இருக்கிறார் நடிகை ரேஷ்மா. 


அதன்படி மேலும் அவர் கூறுகையில், தான் இரண்டு சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பது தனக்கு கஷ்டமாக உள்ளது. அதனால் தான் ஒரு சீரியலில் இருந்து தான் விலகப் போகிறேன். ஆனால் அது என்ன என்பதை பற்றி நான் உங்களிடம் சீக்கிரமாக சொல்கிறேன்.

மேலும், எனக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எப்போதும் ஒரே மாதிரியாக வாழ்ந்து கொண்டிருப்பது ரொம்பவே போர் அடிக்கிறது. திடீரென்று நம்முடைய மனதிற்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அதுவும் சமீப காலமாக நான் ரொம்பவே உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால் தான் இந்தமுடிவு என சொல்லியுள்ளார்.


Advertisement

Advertisement