• Sep 13 2024

பிரபல அரசியல்வாதியைக் கரம்பிடித்த நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை... வைரலாகும் wedding clicks..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவரைப் போலவே இவரின் உறவுமுறை தங்கையான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகின்றார்.


அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான பரினீதி 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நடிகை பரினீதி ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது.


இதனையடுத்து நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பலரும் இந்தத் தம்பதியினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்ற நிலையில் இவர்களின் திருமணப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement