• May 19 2024

தெய்வீக ஆசீர்வாதத்தோடு விடியோவை வெளியிட்ட லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ்.... திரைக்குவர தயாராகும் சந்திரமுகி 2 திரைப்படம்

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி பாகம் 2 தயாராகி இன்னும் 3 நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. படம் வெளியிடும் முன்னரே கோவிலில் பூசை செய்து பட ரிலீசுக்கு தயாராகும் விதத்தில் முன் அறிவிப்பாக லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.  


சந்திரமுகி 2 படத்தினை பி.வாசு இயக்கியிருந்ததோடு  இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா ,ராதிகா ,வடிவேலு உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அத்தோடு சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் தற்போது பாலிவூட் நடிகை கங்கனா ரனாவத்  இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். சந்திரமுகி பாகம் 1 சினிமாத்துறையில் நல்ல ஹிட் அடித்த திரைப்படம் இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 


இந்நிலையில்  சந்திரமுகி 2 நல்ல ஹிட் கொடுக்க வேண்டும் என்று திரைப்பட குழு சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாவதற்கு முன் ஸ்ரீ பெத்தம்மா கோவிலில் பூஜை வழிபாடுகளில் மேட்கொள்ளும் விடியோவை ஒரு நல்ல குறிப்பில் முன் வெளியீட்டாக பதிவு செய்துள்ளது.


ரசிகர்களில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சந்திரமுகி 2 எதிர் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் திகதி ரிலீஸ் ஆகா உள்ளது. சந்திரமுகி 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பொறுத்திருந்து பார்ப்போம். 



Advertisement

Advertisement